திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 31-35)

நடிப்பு நட்பு வேண்டாம் ...

உயிராய் உருகுவதுபோல் 
உனக்கே வாழ்வதுபோல் 
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!
நடிப்பு நட்பு வேண்டாம் ...

உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும் 
உதட்டில் தோன்றும் 
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ 
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -31

------------

விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

பயன் இருந்தால் பழகும் 
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?

+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -32

----------

பயனோடு பழகும் நட்பு ....

பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!

பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!

+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது 
கொள்வாரும் கள்வரும் நேர்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -33

------------

பேராபத்து நட்பால் வரும் ....

பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!

போர்க்களத்தில் கலை வாரும் 
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!

+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 
தமரின் தனிமை தலை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -34

---------------

நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!!
ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத 
உதவி செய்தாலும் வேண்டாம் 
தீய நட்பு ....!!!

பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!

+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 
எய்தலின் எய்தாமை நன்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -35

கருத்துகள்