திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(41-45)

மனதால் நேசிக்காத நட்பு

மனதால் நேசிக்காத நட்பு ....
நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....
காரியத்துக்காய் பழகும் நட்பு ....
ஆருயிர் போல் பழகினாலும் ....
அது கூடா நட்பே ....!!!

உள் ஒன்று வைத்து ....
புறமொன்று பழகும் நட்பை ....
வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...
வெட்டி எரிவதே சிறப்பு ....!!!

+
குறள் 821
+
கூடாநட்பு
+
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 41

---------
மனமில்லாமல் பழகும் நட்பு ....
---

வேண்டும் ஆனால் வேண்டாம் ...
அன்பு இருக்கும் , இருக்காது
சந்தேகத்துடன் பழகும் நட்பு .....
சங்கடத்தில் முடியும் .....!!!

மனமில்லாமல் பழகும் நட்பு ....
மனமில்லாமல் பழகும் ....
பாலியல் இன்பத்துக்கு நிகர் ....
இரண்டுமே வேண்டாம் மனமே ....!!!

+
குறள் 822
+
கூடாநட்பு
+
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 42

------------

நல் நட்பாக மாறிவிடாது ....!!!

---

மனதால் பொருந்தாத நட்பு ....
அமிர்தம்போல் பழகினாலும் ....
உடைந்த மட்பாண்டாமே.....!!!

மனதுக்கு பொருந்தாத நட்பு ....
ஆயிரம் ஆயிரம் நூல்களை ...
வாசித்து அறிவை பெற்றாலும் ....
நல் நட்பாக மாறிவிடாது ....!!!

+
குறள் 823
+
கூடாநட்பு
+
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 43

------------

சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
---

காணும்போது சிரித்தும் ....
காணாதபோது வெறுத்தும் ....
பழகும் நட்பை தொடராதே ....!!!

கண்டவுடன் பழகும் நட்பு ...
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
நெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....
பழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...!!!

+
குறள் 824
+
கூடாநட்பு
+
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 44

------------

நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
---

மனத்தால் நேசிக்காத நட்பு ....
மனம் நிறைந்த வார்த்தை ....
வாயார உரைத்தாலும் ....
உண்மை நட்பு அல்ல ....!!!

ஆயிரம் ஆயிரம் ....
வார்த்தைகளை உதிர்த்தாலும் ....
உயிரைப்போல நடித்தாலும் ...
மனத்தால் இணையாத நட்பு ....
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!

+
குறள் 825
+
கூடாநட்பு
+
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 45

கருத்துகள்