திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(46-50)

நல்லவர்போல் நடித்தாலும் ....

காக்கை 
அன்னநடை நடந்தாலும் ....
காக்கை காக்கைதான் ...
அதுபோல் கெட்டவர்கள்....
நல்லவர்போல் நடித்தாலும் ....
கெட்டவரே......!!!

அறிந்தேன் ....
நீ பேசிய வார்த்தையில் ....
எவ்வளவோ நல்லவன் போல் .....
நடித்தாலும் உன் முகமூடி ....
கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!!

+
குறள் 826
+
கூடாநட்பு
+
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 46

-------------

வேஷங்கள் அடுத்தநொடி அழிந்துவிடும் .....!!!

வேஷம் 
போட்டு ராஜாவானாலும் ...
ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் ....
வேஷங்கள் அடுத்தநொடி .......
அழிந்துவிடும் .....!!!

வில் 
வளைவது அம்பை ....
எய்வதற்கே -அழகாயினும்...
வில் ஆபத்தானதே .....
கெட்டவர்கள் நல்லவார்த்தை ....
பேசினாலும் கேட்டவரே ....!!!

+
குறள் 827
+
கூடாநட்பு
+
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 
தீங்கு குறித்தமை யான்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 47

-----------

பகைவரின் நட்பு கொலைகருவி

பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!

பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!

+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48

-----------

பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
வெளியில் மென்மையும் ...
உள்ளே கொடுமையும் ....
கொண்ட நட்பு வேண்டாம் ....!!!

முகம் சிரிப்பை காட்டி பேசும் ....
அகம் சாக்கடைக்குள் இருக்கும் ....
நாமும் அதுபோல் இருதலையாய் ....
பழகுவது போலி நட்பு .....!!!
+
குறள் 829
+
கூடாநட்பு
+
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 49

------------

முகத்தால் பழகி அகத்தால் வெறு....

நெல்லோடு இணைந்து ....
புல்லும் சமமாக வளரும் ....
நெல் எது ,,,? புல் எது ...?
கண்டறிவது கடினம் .....!!!

தீயவரோடு நட்பு .....
வைத்தால் நானும் ......
ஓடும் புளியம் பழம் போல் ,,,,
பழகிடனும் முகத்தால்....
பழகி அகத்தால் வெறுப்பதே ....
அறிவான நட்பு ....!!!

+
குறள் 830
+
கூடாநட்பு
+
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 
அகநட்பு ஒரீஇ விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 50

கருத்துகள்