திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(51-55)

மன்னித்துவிடாதே ....!!!

நண்பா ....அறியாமையை அறிந்து கொள் ....அறியாமல் தவறு செய்தால் ....மன்னிக்கலாம் .....அறிந்தே தவறுசெய்தால் ....மன்னித்துவிடாதே ....!!!
தீமை என்று தெரிந்தும் ,,,,நட்பு என்று சொல்லிகொண்டு .....வரபோகும் நன்மையை ....அறியாமல் விடுவதே ....அறியாமையாகும் .....!!!
+குறள் 831+பேதைமை+பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.+திருக்குறளும் கவிதையும் - நட்பியல்+கவிதை எண் - 51
அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!
அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 
கையல்ல தன்கட் செயல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52
--
தீமை ஏற்பட்டால் தலை 
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!
செய்ய 
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!
+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் 
பேணாமை பேதை தொழில்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53
நிறைய தவறு செய்பவர்களே 
----
படிக்க வேண்டும் ....
படித்தற்போல் நடக்க வேண்டும் ....
படித்ததை மற்றவருக்கு ....
சொல்லியும் கொடுக்கவேண்டும் ....
இவர்களே அறிவுடையோர் ....!!!
நிறைய படித்து .....
நிறைய அறிந்து ....
நிறைய தவறு செய்பவர்களே .....
அறிவற்றவர்களின் முதன்மை ....
இடத்தவர் ஆவர் ,,,,!!!
+
குறள் 834
+
பேதைமை
+
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் 
பேதையின் பேதையார் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 54
-----------
எல்லாம் எனக்கு தெரியும் ....
----
தான் சொல்வதே சரி ....
தான் செய்வதே சரி ....
யாரும் தடுக்க முடியாது .....
எல்லாம் எனக்கு தெரியும் ....
இதுவே அறிவின்மையின் ....
உச்சமாகும் ....!!!
அறிவின்மையில் வாழ்பவன் ....
நரகலோகத்துக்கு...... 
போகத்தேவையில்லை ......
வாழும் காலத்திலேயே ....
நகரத்திலேயே வாழ்கிறான் ...!!!
+
குறள் 835
+
பேதைமை
+
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் 
தான்புக் கழுந்தும் அளறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 55


------------


கருத்துகள்