திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(56-60)

என் வழி தனிவழி 

என் வழி தனிவழி ....
வார்த்தையால் பேசி பேசி ....
வாழ்கையை இழப்பவர்கள் ....
தன் வழி எதுவென அறியாதவர் ....!!!

தன் வழியை அறியாதவனும் ....
தன்னால் செய்ய முடியாதவற்றை ....
வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் ....
தானும் கேட்டு தன் செயலையும்.....
கெடுப்பான் ....!!!

+
குறள் 836
+
பேதைமை
+
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் 
பேதை வினைமேற் கொளின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 56

--------------------

சொத்தை சேர்க்காதே

அறிவுடன் செல்லவத்தை.....
சேர்ப்பதே சிறந்த அறிவு ....
அறிவில்லாமல் பேதையுடன் ....
சொத்தை சேர்க்காதே ....
நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!!

அறிவில்லாமல் சொத்தை ....
நீ சேர்ப்பாய்யாயின்....
கைக்கு எட்டியது வாய்க்கு ....
எட்டாததுபோல் .....
உன் உறவுகள் பசியுடன் ...
வாடி வதங்குவர் -உன் ...
செல்வம் வேடிக்கை ....
பார்த்து சிரிக்கும் ....!!!

+
குறள் 837
+
பேதைமை
+
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 57

-----------------

ஒன்றுமே அறியாதவன் ...!!!

பேதை என்பவன் ...?
எது நல்லது எது கெட்டது...
ஒன்றுமே அறியாதவன் ...!!!

பேதையிடம் ....
கிடைக்கும் செல்வம் ...
பித்து பிடித்தவனிடம் ....
கிடைத்த போதைப்பொருள் ...
போன்றது ......!!!

+
குறள் 838
+
பேதைமை
+
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் 
கையொன்று உடைமை பெறின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 58

--------------

நட்பின் பிரிவு துன்பம் இல்லை 

நட்பின் பிரிவு ஒன்றும் .....
துன்பம் இல்லை ....
அறிவற்றவருடன் நட்பு .....
கொண்டால் பிரிவு ....
துன்பமில்லையே....!!!

அறிவற்ற பேதையுடன் ....
பழகிய நட்பு இனிமை ...
அதை பிரிந்து செல்வதும் ....
இனிமையே ....!!!

+
குறள் 839
+
பேதைமை
+
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் 
பீழை தருவதொன் றில்

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 59

----------------

செந்தாமரை மத்தியில் ....

அறிஞர்கள் கூடிய ....
மகாசபையில் ....
அறிவற்றவன் ஒருவன் ....
அமர்ந்திருந்தால் .....
செந்தாமரை மத்தியில் ....
நாற்றம் எடுக்கும் பிணம் ...
போன்றது ....!!!

மஞ்சு மெத்தையில் ....
கழுவாத காலுடன் ....
மிதிப்பதுபோல் ....
பேதை ஒருவன் ....
அறிஞர்கள் மத்தியில் ....
இருப்பதாகும் .....!!!

+
குறள் 840
+
பேதைமை
+
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் 
குழாஅத்துப் பேதை புகல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 60

கருத்துகள்