திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(60-65)

பெரும் பஞ்சம் 

செல்வம் இல்லை ....சொத்துகள் இல்லை ....திரவியங்கள் இல்லை ...இவை கவலையில்லை .....!!!
சேர்க்க வேண்டிய செல்வம் ....அறிவே அறிவை திரட்டாத ....மனிதனையே பெரியோர் ....பெரும் பஞ்சம் என்பர் ,,,,!!!
+குறள் 841+புல்லறிவாண்மை+அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.+திருக்குறளும் கவிதையும் - நட்பியல்+கவிதை எண் - 61
----
அறிவற்றவன் ....
அறிவில் தான் அற்றவன் ....
கொடுப்பதில் அறிவற்றவன் ....
நிகரற்ற கொடையாளி ....
கொடுக்கும் போது அவன் ...
அறிவற்றவன் அல்ல ...!!!
அறிவற்றவன் ....
கொடுக்கும் பொருள் .....
அறிவானவனை கவர்கிறது ....
அவன் பெற்ற பாக்கியமே ...!!!
+
குறள் 842
+
புல்லறிவாண்மை
+
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 62
தன்னை வருத்தும்போது 
அறிவில்லாதவன் .....
யார் அறிவில்லாதவன் ...?
வெறுமனையே புத்தக ....
அறிவை பெறாதவன் அல்ல ...!!!
தன்னை வருத்தும்போது ...
எதிரி கூட வெறுக்கும் படி ....
தன்னை வருத்துகிறானே....
அவன்தான் அறிவற்றவன் ...!!!
+
குறள் 843
+
புல்லறிவாண்மை
+
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை 
செறுவார்க்கும் செய்தல் அரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 63
-----------
தனக்கே எல்லாம் புரியும்
அறியாமை ...?
எது அறியாமை ...?
கல்வியால் பெறதவறிய....
அறிவா ..? இல்லை ....!!!
தனக்கே எல்லாம் புரியும் ....
தான் சொல்வதே சரியாது ....
தானே அறிவானவன் ...
என்ற ஆணவமே அறியாமை ...!!!
+
குறள் 844
+
புல்லறிவாண்மை
+
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை 
உடையம்யாம் என்னும் செருக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 64
----------------
ஒப்புகொள்வதே சிறப்பு
தெரியாததை தெரியாது ....
ஒப்புகொள்வதே சிறப்பு ...
தெரியாததை தெரிந்ததுபோல் ....
வேஷம் போடுவதே -பெரும் 
அறியாமை ....!!!
அறியாத நூல்களை ....
அறிந்ததை போல் பேசுவது ....
அறிந்தவர்களுக்கே ....
அறியாமையை ஏற்படுத்துவார் ...!!!
+
குறள் 845
+
புல்லறிவாண்மை
+
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற 
வல்லதூஉம் ஐயம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 65
----------------



கருத்துகள்