திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(65-70)

செய்த ....
குற்றத்தை ஒப்பு கொள்....
செய்த குற்றத்தை மேலும் ....
செய்யாதே - அது மடமை ....!!!

குற்றத்தை மறைக்க ...
இன்னுமொரு குற்றத்தை ...
செய்துகொண்டே இருப்பது ....
உடலை அழகு படுத்த ...
உடையை மாற்றும் மாயையாகும் ....!!!

+
குறள் 846
+
புல்லறிவாண்மை
+
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் 
குற்றம் மறையா வழி.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 66

-------------

நல்லதையே செய் ...
நல்லத்தையே கேள்....
நல்லதையே பார் ...
என்ற தத்துவத்தை .....
கடைபிடிக்காதவர் ....
அறிவிலிகள் இவர்களே ....!!!

அறிவில்லாதவன் ....
இதை செய்யாதவன் ....
யானை தன் தலையில் ...
மண் அள்ளி போட்டதுபோல் ....!!!

+
குறள் 847
+
புல்லறிவாண்மை
+
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் 
பெருமிறை தானே தனக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 67

-------------

தானாக திருந்து நண்பா
-----------

ஒன்றில் 
தானாக திருந்து நண்பா ....
நான் சொல்வதை கேட்டு ....
திருந்து நண்பா .....!!!

சொந்த புத்தியும் இல்லை ....
சொல் புத்தியும் இல்லை ....
இவர்களே உலகில் -எந்த 
மருந்தாலும் மாற்ற முடியாத ....
பெரும் நோயாளிகள் ....!!!

+
குறள் 848
+
புல்லறிவாண்மை
+
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 68

--------------

ஒப்புகொள்வதில்லை
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல் 
நடித்துக்கொள்வான் ,,,,!!!

அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!


+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் 
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69

-------------

எவ்வளவோ சொன்னாலும் ....
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?

வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!

+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து 
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70

கருத்துகள்