திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(70-75)

"மனவேறுபாடு "
----------------------
மனிதனோடு ......
மட்டுமல்ல பகை ......
உயிரினங்கள் .....
எல்லாவற்றோடும் பகை .....!!!

எல்லாவற்றோடும் ....
ஒப்பிட்டு ,வேறுபடுத்தி ....
தன்னை தானே குறைத்து ....
மதிப்பிட்டு வாழ்வதே .....
"மனவேறுபாடு " என்பர் ....!!!
+
குறள் 851
+
இகல்
+
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 71

------------

நண்பா .....
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!

இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!! 

+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72

------------

நீக்கு நீக்கு ....
மனவேறுபாடு ......
நீக்கு .........
நீக்கவேண்டியதில் .....
இதுவே முதன்மை ....!!!

நீக்கிய மனவேறுபாடை ......
நீக்கிய கணமே ........
கொட்டி கிடைக்கும் .....
புகழ் ........!!!

+
குறள் 853
+
இகல்
+
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் 
தாவில் விளக்கம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 73

-------------

துன்பத்தில் கொடிய ....
துன்பம் மனத்துன்பம் .....
மனதை கொல்லும்....
மகா துன்பம் .......!!!

மனத்துன்பத்தை ......
நீக்கியவன் என்னவோ .......
அதுவே அவனுக்கு ....
இன்பத்தில் பெரும் .....
இன்பமாகும் .....!!!

+
குறள் 854
+
இகல்
+
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் 
துன்பத்துள் துன்பங் கெடின்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 74

------------------------

மனவேறுபாடை .....
தோன்றும் போதே ....
தடுக்கும் ஆற்றல் .....
எவனுக்கு வருகிறதோ ....?
அவனை வெல்ல இந்த .....
உலகில் யாரும் இல்லை .....!!!

மன கசப்பை நீக்கியவன் .....
முன் அனைவரும் தோல்வியை .....
சந்தித்தே ஆகவேண்டும் .....!!!
+
குறள் 855
+
இகல்
+
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே 
மிக்லூக்கும் தன்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 75

கருத்துகள்