இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செந்தாமரை மத்தியில் ....

செந்தாமரை மத்தியில் .... அறிஞர்கள் கூடிய .... மகாசபையில் .... அறிவற்றவன் ஒருவன் .... அமர்ந்திருந்தால் ..... செந்தாமரை மத்தியில் .... நாற்றம் எடுக்கும் பிணம் ... போன்றது ....!!! மஞ்சு மெத்தையில் .... கழுவாத காலுடன் .... மிதிப்பதுபோல் .... பேதை ஒருவன் .... அறிஞர்கள் மத்தியில் .... இருப்பதாகும் .....!!! + குறள் 840 + பேதைமை + கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்  குழாஅத்துப் பேதை புகல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 60

நட்பின் பிரிவு துன்பம் இல்லை

நட்பின் பிரிவு துன்பம் இல்லை  நட்பின் பிரிவு ஒன்றும் ..... துன்பம் இல்லை .... அறிவற்றவருடன் நட்பு ..... கொண்டால் பிரிவு .... துன்பமில்லையே....!!! அறிவற்ற பேதையுடன் .... பழகிய நட்பு இனிமை ... அதை பிரிந்து செல்வதும் .... இனிமையே ....!!! + குறள் 839 + பேதைமை + பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்  பீழை தருவதொன் றில் + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 59

ஒன்றுமே அறியாதவன் ...!!!

ஒன்றுமே அறியாதவன் ...!!! பேதை என்பவன் ...? எது நல்லது எது கெட்டது... ஒன்றுமே அறியாதவன் ...!!! பேதையிடம் .... கிடைக்கும் செல்வம் ... பித்து பிடித்தவனிடம் .... கிடைத்த போதைப்பொருள் ... போன்றது ......!!! + குறள் 838 + பேதைமை + மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்  கையொன்று உடைமை பெறின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 58

சொத்தை சேர்க்காதே

சொத்தை சேர்க்காதே அறிவுடன் செல்லவத்தை..... சேர்ப்பதே சிறந்த அறிவு .... அறிவில்லாமல் பேதையுடன் .... சொத்தை சேர்க்காதே .... நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!! அறிவில்லாமல் சொத்தை .... நீ சேர்ப்பாய்யாயின்.... கைக்கு எட்டியது வாய்க்கு .... எட்டாததுபோல் ..... உன் உறவுகள் பசியுடன் ... வாடி வதங்குவர் -உன் ... செல்வம் வேடிக்கை .... பார்த்து சிரிக்கும் ....!!! + குறள் 837 + பேதைமை + ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை  பெருஞ்செல்வம் உற்றக் கடை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 57

என் வழி தனிவழி

என் வழி தனிவழி  என் வழி தனிவழி .... வார்த்தையால் பேசி பேசி .... வாழ்கையை இழப்பவர்கள் .... தன் வழி எதுவென அறியாதவர் ....!!! தன் வழியை அறியாதவனும் .... தன்னால் செய்ய முடியாதவற்றை .... வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் .... தானும் கேட்டு தன் செயலையும்..... கெடுப்பான் ....!!! + குறள் 836 + பேதைமை + பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்  பேதை வினைமேற் கொளின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 56

எல்லாம் எனக்கு தெரியும் ....

எல்லாம் எனக்கு தெரியும் .... ---- தான் சொல்வதே சரி .... தான் செய்வதே சரி .... யாரும் தடுக்க முடியாது ..... எல்லாம் எனக்கு தெரியும் .... இதுவே அறிவின்மையின் .... உச்சமாகும் ....!!! அறிவின்மையில் வாழ்பவன் .... நரகலோகத்துக்கு......  போகத்தேவையில்லை ...... வாழும் காலத்திலேயே .... நகரத்திலேயே வாழ்கிறான் ...!!! + குறள் 835 + பேதைமை + ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்  தான்புக் கழுந்தும் அளறு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 55

நிறைய தவறு செய்பவர்களே

நிறைய தவறு செய்பவர்களே  ---- படிக்க வேண்டும் .... படித்தற்போல் நடக்க வேண்டும் .... படித்ததை மற்றவருக்கு .... சொல்லியும் கொடுக்கவேண்டும் .... இவர்களே அறிவுடையோர் ....!!! நிறைய படித்து ..... நிறைய அறிந்து .... நிறைய தவறு செய்பவர்களே ..... அறிவற்றவர்களின் முதன்மை .... இடத்தவர் ஆவர் ,,,,!!! + குறள் 834 + பேதைமை + ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்  பேதையின் பேதையார் இல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 54

தலை குனிந்து வெட்கப்படு

தலை குனிந்து வெட்கப்படு -- தீமை ஏற்பட்டால் தலை  குனிந்து வெட்கப்படு ..... ரசிக்க வேண்டியவற்றை .... ரசித்து வாழ்,,,,,, அன்பு வைக்கவேண்டின் ... அன்புவை .....!!! செய்ய  வேண்டிய அனைத்தையும் ..... செய்யாதிருப்பது அறியாமையின் ..... உச்சகட்டம் ....! அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!! + குறள் 833 + பேதைமை + நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்  பேணாமை பேதை தொழில். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 53

அறுத்துவிட வேண்டும் ....!!!

அறுத்துவிட வேண்டும் ....!!! அறியாமையில் பெரும் .... அறியாமை அறிந்துகொள் .... நண்பா .....!!! அனுகூலம் இல்லையென்று .... அறிவுக்கு எட்டியபோதும் .... தொடர்ந்து அதன்மேல் பற்று .... வைத்துகொண்டு தொடர்வதாகும் .... அனுகூலம் இல்லாதவற்றை .... அறுத்துவிட வேண்டும் ....!!! + குறள் 832 + பேதைமை + பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை  கையல்ல தன்கட் செயல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 52

மன்னித்துவிடாதே ....!!!

மன்னித்துவிடாதே ....!!! நண்பா .... அறியாமையை அறிந்து கொள் .... அறியாமல் தவறு செய்தால் .... மன்னிக்கலாம் ..... அறிந்தே தவறுசெய்தால் .... மன்னித்துவிடாதே ....!!! தீமை என்று தெரிந்தும் ,,,, நட்பு என்று சொல்லிகொண்டு ..... வரபோகும் நன்மையை .... அறியாமல் விடுவதே .... அறியாமையாகும் .....!!! + குறள் 831 + பேதைமை + பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு  ஊதியம் போக விடல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 51

அன்பு கவிதை வாசகர்களே

அன்பு கவிதை வாசகர்களே ---------------------------- திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும்  பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கடந்த பலமாதமாய் கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன் . இந்தவகையில் கவிதை முறையை யான் இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை . என் மொத்த கவிதை அனைத்தும் சொந்த கவிதையே இன்று 19.09.2015 வரை எழுத்து தளத்தில் 6300 கவிதை எழுதியுள்ளேன் . அதில் 250 கவிதை இன்பத்துப்பால் கவிதையாக அமைவதில் மிக்க சந்தோசம் .ஆனால் வாசக பெருமக்களே இதுபோன்ற கவிதைக்கு தரும் ஊக்கம் போதாது என்றே கூறுவேன் . இன்று இந்த  திருக்குறள் கவிதை ஒரு சின்ன விடயமாக இருக்கலாம் . என்றோ ஒருநாள் தமிழ் ஆவலர் .திருக்குறள்  ஆவலர் கண்ணில் இது படும்போது இதன் முக்கியத்துவம் உணரப்படும் என்று நம்புகிறேன் . இன்னுமொரு எழுத்தாளர் " இதைவிட சிறப்பாக எழுதுவதற்கு இது உதவலாம் " என்ற மகிழ்சியுடன்  என் எண்ணத்தை முடிக்கிறேன்  நன்றி  கே இனியவன்

சின்னனாய் விலகியிருப்பது ஊடல்

சின்னனாய் விலகியிருப்பது ஊடல் சின்ன சண்டையிட்டு ..... சின்ன கோபத்துடன் .... சின்னனாய் விலகியிருப்பது ... ஊடல் எனப்படும் ....!!! ஊடலின் அதிக இன்னமே .... கூடலின் அதிக இன்பமாகும் .... கூடலின் ஒரு செயலே .... ஊடல் ஆகும் ......!!! + குறள் 1330 + ஊடலுவகை + ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 250

எனக்கொரு உதவி செய்வாயோ .....?

எனக்கொரு உதவி செய்வாயோ .....? நிலா ஒளி முகத்தால் .... ஒளியில் மின்னுகிறாள்..... ஆவலுடன் நான் பெறும் .... ஊடல் இன்பம் இன்னும் ... தொடரனும் .....!!! ஏய் இரவே .... எனக்கொரு உதவி .... செய்வாயோ .....? இன்று நீ விடியாமல் .... நீண்டுருப்பாயோ....? + குறள் 1329 + ஊடலுவகை + ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 249

இன்பம் கிடைக்குமோ ....?

இன்பம் கிடைக்குமோ ....? வியர்வை வரும்வரை ... விரும்பியவருடன் .... கூடிபெற்ற இன்பம் .... இன்னுமொருமுறை .... கிடைக்குமோ .....? இன்னொருமுறை .... ஊடல் செய்தால் .... முன் பெற்ற கலவி .... இன்பம் கிடைக்குமோ ....? + குறள் 1328 + ஊடலுவகை + ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 248