இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவன் பிரிந்து சென்றான் ...

என்னவன் பிரிந்து சென்றான் ... என்னை  சம்மதிக்க வைத்து ... என்னவன் பிரிந்து சென்றான் ... நிச்சயம் என்னவனை .... ஊரார் புறக்கணிக்க மாட்டார்கள் .... துற்றவும் மாட்டார்கள் ....!!! என் உடலில் பரவும் ... காதல் நோய் என்னவனை  நல்லவன் என்று கூற .. உதவும் என்றால் -என்  உடலில் காதல் நோய் ... பரவட்டும் .....!!! திருக்குறள் : 1190 + பசப்புறுபருவரல் + பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்  நல்காமை தூற்றார் எனின். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 110

உண்மையில் நல்லவரே ...!!!

 உண்மையில் நல்லவரே ...!!! உன்னை பிரிவதற்கு ... நான் தானே விடை தந்தேன் .... என்னவனே நீ என்னை ... சம்மதிக்க வைத்தாய் ... நீ உண்மையில் நல்லவரே ...!!! நீவீர் ... நல்லவராக இருப்பதால் .. என் மேனியில் காதல் ... நோய் (பசலை) படர்கிறது .... அதிலும் ஒரு சந்தோசம் ... உன்னால்  தானே படர்கிறது ....!!! திருக்குறள் : 1189 + பசப்புறுபருவரல் + பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்  நன்னிலையர் ஆவர் எனின். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 109

இழிவு படுத்துகிறார்கள் ...

இழிவு படுத்துகிறார்கள் ... உன்னால் தானடா .... எல்லாம் நடந்தது ..... என் உடல் முழுவதும் ... காதல் நோய் படர்ந்து.....  விட்டது ...!!! என்  உடலில் காதல் நோய் ... பரவியிருப்பதை ஊரார் ... இழிவு படுத்துகிறார்கள் ... நீ பிரிந்து சென்றது தான் ... காரணம் என்று கூற ... மாட்டார்களாமே .....!!! திருக்குறள் : 1188 + பசப்புறுபருவரல் + பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்  துறந்தார் அவர்என்பார் இல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 108

என்ன மாயம் பாருங்கள் ...?

என்ன மாயம் பாருங்கள் ...? என்னவனில் ... அருகில் நெருங்கி இருந்தேன் ... சற்று விலகியும் இருந்தேன் ... என்ன மாயம் பாருங்கள் ...? என் உடல் முழுதும் ..... என்னவன் என்னை அள்ளி ... கொண்டதுபோல் படர்கிறது ... பசலை (தேமல் ) நிறம் .... காதல் செய்தால் நோய் ... என்பது உண்மையோ ...? திருக்குறள் : 1187 + பசப்புறுபருவரல் + புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்  அள்ளிக்கொள் வற்றே பசப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் கவிதை எண் - 107

உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!

உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!! என்னவனே .... நீ என்னை பிரியும் போது ... எண்ணை அற்று மங்கும் .. விளக்கை போல் - நானும் ... உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!! ஒளி  இழந்தால் இருள் படரும்  .... உன்னை பிரிந்த போது .... என் உடலில் காதல் பசலை ... (தேமல் ) படர்கிறது ....!!! திருக்குறள் : 1186 + பசப்புறுபருவரல் + விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்  முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 106

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!!

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!! ஒரு  நொடிகூட பிரியவில்லை ... சிறு தூரம் கூட அவர்...  செல்ல வில்லை .....!!! எப்படி என் உடலில் ... காதல் நோய் அதற்குள் .. தொற்றியது ....? அவர் பிரிந்து செல்லும் .. நொடியில் காதல் பசலை  நிறமும் என்னில் படர்கிறதே  என்ன மாயம் இது ...? திருக்குறள் : 1185 + பசப்புறுபருவரல் + உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்  மேனி பசப்பூர் வது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 105

ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!

ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!! நான்  நினைப்பதும் அவரை ... எந்தநேரமும் பேசுவதும் .. அவரை பற்றியே .... அவரின் நேர்மையும் .. திறமையுமே கூறுகிறேன் ...!!! எப்படி...? என் உடலில் என்னை  அறியாமல் உண்ணராமல்... பசலை நிறம் வந்தது ..? இது ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!! திருக்குறள் : 1184 + பசப்புறுபருவரல் + உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்  கள்ளம் பிறவோ பசப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 104

காதல் ஒருவகை பரிமாற்றம்

காதல் ஒருவகை பரிமாற்றம்  என்னவன் .. காதல் நோயையும் ..... உள்ளதுன்பத்தையும்... எனக்கு கைமாறாய் தந்து ....!!! என் அழகையும் ... காதல் வெட்கத்தையும் ...  கொண்டு சென்று விட்டான் ... காதல் ஒருவகை பரிமாற்றம் ... தான் போல் இருக்கிறதே ...!!! திருக்குறள் : 1183 + பசப்புறுபருவரல் + சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா  நோயும் பசலையும் தந்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 103

பிரிவு கொடுமையானதே ...

பிரிவு கொடுமையானதே ... என்னவனின் பிரிவு .. கொடுமையானதே ... அதனால் வந்த பசப்பும் ... கொடுமையானதே ....!!! என்னவன் .... தந்த பிரிவின் வலியை... என் உடல் முழுதும்  படர்கிறது - நினைத்தால் சுமைகூட சுகம் தான் ...!!! திருக்குறள் : 1182 + பசப்புறுபருவரல் + அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்  மேனிமேல் ஊரும் பசப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 102

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

யாரிடம் சொல்லி கதறுவேன் ...? என்னவனே .... நீ என்னை விட்டு பிரிய .. விடைகொடுத்தது நானே ... அன்று தெரியவில்லை .. இதனை துன்பத்தை ....!!! இப்போ நான் படும் ... துன்பத்தை -என் உடல் ... படும் வேதனையை யாரிடம் ... யாரிடம் சொல்லி கதறுவேன் ...? திருக்குறள் : 1181 + பசப்புறுபருவரல் + நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்  பண்பியார்க்கு உரைக்கோ பிற. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 101

இன்பத்துப்பால் கவிதை எண் - 100

இன்பத்துப்பால்  கவிதை எண் - 100 என் இதயம்  படும் வேதனையை ... அடிமேல் அடிவிழும்  பறைபோல் துடி துடித்து .. என் கண்கள் ஆற்றாய்  பெருக்கேடுகின்றன ....!!! நான் படும் வேதனையை .. மறைக்கவும் முடியவில்லை .. மறைத்தாலும் என் தோழிகள் '' நம்பபோவதுமில்லை ..... காதலின் வலி எல்லா .. பெண்களுக்கும் புரியும் ...!!! திருக்குறள் : 1180  + கண்விதுப்பழிதல் + மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்  அறைபறை கண்ணார் அகத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 100

காதல் கண்களை தவிர ....!!!

காதல் கண்களை தவிர ....!!! என்னவன்  வராததால் என் கண்கள் .. தூங்கவே  இல்லை ... வந்தபின் அவனையே .. பார்க்கப்போகும் கண்கள் .. தூங்க போவதுமில்லை ...!!! அவன் ...!!! இருந்தாலும் துன்பம் ... இல்லாவிட்டாலும் துன்பம் ... இரட்டை வலியை .... காதல் கண்களை தவிர .... வேறு அனுபவிக்குமோ ...? திருக்குறள் : 1179 + கண்விதுப்பழிதல் + வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை  ஆரஞர் உற்றன கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 99

இதயத்தால் விரும்பாமல்...!!!

இதயத்தால் விரும்பாமல்...!!! என்னவனே .....!!! இதயத்தால் என்னை .. விரும்பாமல் வார்த்தையால் .. விரும்பியவனே - நீர்  என்றாலும் நல்லாயிரு ....!!! என் கண்களோ ... உன்னை காணாமல் ... ஏங்கி ஏங்கி தவிப்பதை ... தூக்கமின்றி தவிக்கின்றன ... என்னவனே ஒருமுறை  வாராயோ ....!!! திருக்குறள் : 1178 + கண்விதுப்பழிதல் + பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்  காணாது அமைவில கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 98

இன்புற்ற என் கண்கள் ...

இன்புற்ற என் கண்கள் ... அன்று  என்னவனை பார்க்கும் போது  இழைந்து குழைந்து  இன்புற்ற என் கண்கள் ... இன்பத்தின் உச்சத்தை ... அனுபவித்தன ....!!! இன்றோ .... அழுது அழுது தேய்கின்றன ... சொல்ல முடியாத சோகத்தை  அனுபவிக்கின்றன .. இறுதி துளி கண்ணீர் .. வற்றும் வரை அழுகின்றன ...!!! திருக்குறள் : 1177 + கண்விதுப்பழிதல் + உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து  வேண்டி அவர்க்கண்ட கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 97

காரணமான கண்களே ......!!!

காரணமான கண்களே ......!!! பூக்கள்  வாடுவதுபோல் ... என் கண்களும் வாடுகின்றன ... என் காதல் நோய்க்கு  காரணமான கண்களே ......!!! நான்  வாடுவதுபோல் .. என் கண்களும் வாடுகின்றன ... ஒருவகையில் எனக்கு  இன்பம் தான் - என்னை வாட  வைத்த கண்கள் வாடுவதால் ...!!! திருக்குறள் : 1176 + கண்விதுப்பழிதல் + ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்  தாஅம் இதற்பட் டது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 96

அன்று உணரவில்லை...

அன்று உணரவில்லை... கடலை விட ஆழமான .... காதலை ஏற்படுத்திய .. என் கண்கள் .... அன்று உணரவில்லை... இத்தனை வலிவருமென்று ....!!! கண்ணீரால்  நிரம்பிய கண்கள் தூங்க .. முடியாமல் தவிக்கிறதே ... என் கண் படும் வேதனையை .. சொல்ல வார்த்தையே இல்லை ...!!! திருக்குறள் : 1175 + கண்விதுப்பழிதல் + படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்  காமநோய் செய்தஎன் கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 95

நீ அனுபவித்துகொள் ..!!!

நீ அனுபவித்துகொள் ..!!! என் கரு விழிகண்கள் ... அவனை கண்டவுடம் .. காதல் கொண்டு தவிக்கிறது .. காதலில் விழுந்து தப்பவும் .. முடியாமல் வாழவும்  முடியாமல் தவிக்கிறது .....!!! பாவம் என் கண்கள்  அழுது அழுது வற்றியே விட்டது கண்கள் ... செய்தது நீ அனுபவித்துகொள் .. கண்ணே.....!!! திருக்குறள் : 1174 + கண்விதுப்பழிதல் + பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா  உய்வில்நோய் என்கண் நிறுத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 94

என் கண்களை நினைத்து

என் கண்களை நினைத்து  அன்று  பார்த்த நொடியில் .. அவரை பற்றிக்கொண்டேன்.. கண் பார்த்தால் காதல் வரும் .. என்பதை கண்டுகொண்டேன் ...!!! இன்று  என்னவனை நினைத்து  என் கண்கள் கலங்குகின்றன ... என் கண்களை நினைத்து  சிரிக்கிறேன் சிந்திக்கிறேன்  திணறுகிறேன் நான் ...!!! திருக்குறள் : 1173 + கண்விதுப்பழிதல் + கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்  இதுநகத் தக்க துடைத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 93

காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

காரணம் நீதானே கண்ணே,,,,,!!! ஏய் கண்விழியே ... கண்டவுடன் காதல் கொண்டாய் ... வரப்போகும் துன்பத்தை .... அறியாமல் மயங்கினாய் ..... விரும்பினாய் .....!!! காணவில்லை உயிரை  என்பதால் கலங்கி நிற்கிறாய்  கண் விழியே  -அத்தனைக்கும்  காரணம் நீதானே கண்ணே,,,,,!!! திருக்குறள் : 1172 + கண்விதுப்பழிதல் + தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்  பைதல் உழப்பது எவன். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 92