இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்போ வலியால் துடித்ததே ...!!!

இப்போ வலியால் துடித்ததே ...!!! எமக்கிடையே ... உள் நுழைந்த குளிர் காற்று ... எம்மை பிரித்தபோது .... உன் நெற்றி நிறம் மாறியது ....!!! அவள் நெற்றியின் நிறம் ... மாறியது கண்டு அவள் ... கண்கள் வெட்கப்பட்டான ... அந்த கண்கள் இப்போ  வலியால் துடித்ததே ...!!! குறள் 1240 + கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே  ஒண்ணுதல் செய்தது கண்டு + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 160

எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

எப்படி தாங்குயாய் என் பிரிவை ..? என்னவளே ... உன்னோடு இருந்த நொடி ... என் கைகள் உன்னிலிருந்து ... விலகும் சந்தர்ப்பத்தில் ... மெல்லிய குளிர் காற்று ... எம்மை பிரித்தது உயிரே ...!!! அந்த சிறு பிரிவையே ... தாங்காத என்னவள் -என்னையே ... பிரிந்திருக்கும் என்னவளே  எப்படி தாங்குயாய் என் பிரிவை ..? குறள் 1239 + முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற  பேதை பெருமழைக் கண். + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 159

ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!! என்னவளே .... இறுக்க பிடித்த என் கைகள் .... உனக்கு வழியை தருமே ... கணப்பொழுதில் இறுக்கத்தை .. கை விட்டேன் ....!!! என்னவளே ... உன் நலிவடைந்த வளையல் ... கைகள் உன் அழகிய நெற்றியை ... ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!! குறள் 1238 + முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது  பைந்தொடிப் பேதை நுதல். + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 158

நெஞ்சே ஒரு தூது செல் ...

நெஞ்சே ஒரு தூது செல் ... நெஞ்சே ஒரு தூது செல் ... இரக்கமற்று பிரிந்திருக்கும் ... என்னவனிடம் என் நிலையை ... உரைப்பாயோ ...? இடை மெலிந்து ... தோள் மெலிந்து - என் ... வளையல் இடும் கைகள் .. மெலிந்து துடிப்பதை -அவரிடம்  சொல் நெஞ்சே - எனக்கு  தூதுசென்ற பெருமை பெறு ... என் நெஞ்சே ....!!! குறள் 1237 + பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்  பூசல் உரைத்து. + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 157

இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

இதயம் வெந்து துடிக்கிறேன்....!!! என்னவனே .... உன் பிரிவால் என் தோள்கள்  என் வளையல்கள் நலிகின்றன  துயரத்தின் கொடுமையை ... அனுபவிக்கிறேன் ....!!! எனது துயரை பார்த்த .... உறவினர் உம்மை இரக்கம்.... அற்றவர் என்று சொல்லும் ... ஒவ்வொரு நொடியும் .... இதயம் வெந்து துடிக்கிறேன்....!!! குறள் 1236 + தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்  கொடியர் எனக்கூறல் நொந்து. + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 156

கை நழுவி விழுகின்றன ....

கை நழுவி விழுகின்றன  .... என்னவனின் பிரிவால் .... அழகிய வளையல்கள் ... கை நழுவி விழுகின்றன  .... பூரித்த தோள்கள் நலிந்து ... வருகின்றன ....!!! என்னவனே ... தேய்ந்த தோள்கள் ... உன் பிரிவால் நான் ... வாடுவதை ஊர் அறிய ... செய்கிறதடா ....!!! குறள் 1235 + கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு  தொல்கவின் வாடிய தோள். + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 155

நான் படும் துயரத்தை ....!!!

நான் படும் துயரத்தை ....!!! என்னவனே அழுதழுது தோள்கள் ... மெலிந்து விட்டன ... முன்னைய அழகை ... இழந்து விட்டன ....!!! அழகாக நீர் அணிந்த வளையல் கூட கழண்டு விழுகின்றன ... இதை விட என் சொல்வேன் .. நான் படும் துயரத்தை ....!!! குறள் 1234 + பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்  தொல்கவின் வாடிய தோள். + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 154

என் தோள்கள் நலிவதை ..

என் தோள்கள் நலிவதை .. என்னவனே உமை மணந்த தருணத்தில் .... இன்பத்தால் பூரித்தது  என் தோள்கள் ....!!! உம்மை பிரிந்த ... காலம் முதல் மெலிந்து ... வருகிறது என் தோள்.... தவிக்கிறேன் துடிக்கிறேன் .. என் தோள்கள் நலிவதை .. பாராயோ ...? குறள் 1233 + தணந்தமை சால அறிவிப்ப போலும்  மணந்தநாள் வீங்கிய தோள். + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 153

என்னவனை காணாமல் ....

என்னவனை காணாமல் .... என்னவனை காணாமல் .... என் கண்களில் கண்ணீர் ... பசந்து பசந்து வழிகின்றன ...!!! விரும்பியவரை காணாத ... கண்களால் வேறு என்ன ... செய்ய முடியும் ....? பார்பதற்கு மட்டும் இல்லை  கண்கள் - காதலர்  அழுவதற்கும் தான் ...!!! குறள் 1232 + நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்  பசந்து பனிவாரும் கண். + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 152

உனை நினைத்து கலங்கிய...

உனை நினைத்து கலங்கிய...  என்னவனே ... பிரிவு துயரை தந்து .... நெடும் தூரம் சென்றவனே ... உனை நினைத்து கலங்கிய...  கண்கள் அழகிழந்து  விட்டதடா ...!!!  உன் அழகை பார்த்து ... அணுவாய் ரசித்த கண்களை .. என் மனம் என்னும் மலர் ... வெட்கப்பட்டான - இப்போ  அழகிழந்து இருக்கும் கண்கள் .. மனமலரை பார்த்து .... வெட்கப்படுகின்றன .....!!! குறள் 1231 + சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி  நறுமலர் நாணின கண். + உறுப்புநலனழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 151

உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

உயிரே மாய்ந்து போகிறதே ....!!! என்னவனே .... உழைப்புக்காக பிரிந்தவனே ... ஊர் விட்டு சென்றவனே .... நம்காதலை நினைத்து வாழ்ந்து .. கொண்டிருக்கிறேன் ....!!! உன் நினைவால் மாய்ந்து ... போகாத என் உயிர் -மாலை  பொழுது வரும் வேளைகளில் ... உயிரே மாய்ந்து போகிறதே ....!!! குறள் 1230 + பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை  மாயும்என் மாயா உயிர். + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 150

என் ஊரையே வதைகிறாய் ...

என் ஊரையே வதைகிறாய் ... மாலை பொழுதே ..... நீ பொல்லாத கொடுமை ... செய்கிறாயே .... உன் வரவு என்னை .... கொடுமை படுத்துகிறதே ....!!! என் அறிவையே ... மயக்கும் மாலை பொழுதே .... என்னை மட்டும் .... துன்பபடுத்தவில்லை .... என் ஊரையே வதைகிறாய் ... பாவம் காதலர்கள் ....!!! குறள் 1229 + பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு  மாலை படர்தரும் போழ்து. + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 149

தணலில் வேகுதடா ...

தணலில் வேகுதடா ... காதலனே ..... மாலை பொழுது வேளை... தணலில் வேகுதடா ... என் மனமும் உடலும் ...!!! ஆயனே ... உன் புல்லாங்குழல் ஓசை .. மாலை பொழுதில் என்னை ... கொல்லவரும் கருவியின் ...  ஓசைபோல் இருக்குதடா ...!!! குறள் 1228 + அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்  குழல்போலும் கொல்லும் படை. + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 148

வாடி வந்தங்குகிறது .....!!!

வாடி வந்தங்குகிறது .....!!! என்னவனே நான் ... உணர்ந்தேன் -காதல்  காலையில் அரும்பும் .... மொட்டு .....!!! பகல் முழுதும் காதல்....  இன்பத்தால் பூரிக்கிறது .. பூத்து குலுங்குகிறது .... மாலையில் வாடி  வந்தங்குகிறது .....!!! குறள் 1227 + காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி  மாலை மலரும்இந் நோய். + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 147

பூவாய் வாடுகிறேன்

பூவாய் வாடுகிறேன் என்னவனே ....!!! நீர் இல்லாத மாலையின்  வலி புரிகிறது ....!!! மாலை பொழுது வரும் ... வேலையில் நெருப்பில் .. விழுந்த பூவாய் வாடுகிறேன் .... நீர் என்னருகில் .... இருந்த  மாலை .... பொழுதின் இன்பம் ... இத்தனை துன்பத்தை ... தருமென்று அறிந்திலேன் ...!!! குறள் 1226 + மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத  காலை அறிந்த திலேன். + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 146