இடுகைகள்

கண்கள் செய்த குற்றமே ..

கண்கள் செய்த குற்றமே .. என்  கண்கள் செய்த குற்றமே .. உன் மீது காதல் வந்தது .. கண்ணே என் கண்ணே  நீ தான் என் உயிரே ....!!! கண்ணால் தோன்றிய ... காதல் நோயென்பதால் ... தானே உன்னை நினைந்து .. என் கண்கள் அழுகின்றனவோ ...? தோற்றிவித்ததும் -நீ  துன்பப்படுவதும் - நீ  திருக்குறள் : 1171 + கண்விதுப்பழிதல் + கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்  தாம்காட்ட யாம்கண் டது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 91

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

நீ இருக்கும் தூரம் வரை ....!!! என்னவனே .. நீ இருக்கும் தூரம் வரை  என் எண்ணங்களும்  நீண்டு கொண்டே செல்கிறது ....!!! எண்ணங்கள் நீண்ட  தூரம் போல் -என்  கண்கள் நீ இருக்கும்  இடத்தை சென்றிருந்தால்  கண்கள் கண்ணீர்  வெள்ளத்தில் நீந்தாதடா ....!!! திருக்குறள் : 1170 + படர்மெலிந்திரங்கல்  + உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்  நீந்தல மன்னோஎன் கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 90

இரவுகளே நிறுத்துங்கள்

இரவுகளே நிறுத்துங்கள்  காதல் துன்பத்தில்  பெரும் துன்பம் விடியாத  இரவுகள் தான் .....!!! நினைவுகளோடு தூங்காத .. கண்ணுக்கு விடியல் தான்  விடுதலை .......!!! நீண்டு போகும்  இரவுகளே நிறுத்துங்கள்  முடியவில்லை இதற்கு  மேல் நினைவுகளோடு  ஏங்கிகொண்டிருக்க .....!!! திருக்குறள் : 1169 + படர்மெலிந்திரங்கல்  + கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்  நெடிய கழியும் இரா. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 89

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

நீ -என்னோடு இருகிறாய் ...!!! ஓ இரவே நீயும்  என்னைபோல் அநாதை  எல்லோரையும்  தூங்க வைத்திவிட்டு  நீ -என்னோடு இருகிறாய் ...!!! காதல்  வலி கொண்டவருக்கு  பகல் என்ன ..?  இரவென்ன ..? இரவே கவலை படாதே  உன்னோடு நானும்  இருக்கிறேன் ....!!! திருக்குறள் : 1168 + படர்மெலிந்திரங்கல்  + மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா  என்னல்லது இல்லை துணை. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 88

தத்தளிக்கிறேன் ...!!!

தத்தளிக்கிறேன் ...!!! என்னவனே  காதலின் துன்பம்  நடுகடலில் தத்தளிக்கும்  படகை போன்றது ....!!! நடு ராத்திரியானாலும் ... உன் நினைவோடு .... தனித்திருந்து தவிக்கிறேன் ... காதல் என்ற கடலின் ... துன்பத்தை கடந்து செல்ல .... முடியாமல் தத்தளிக்கிறேன் ...!!! திருக்குறள் : 1167 + படர்மெலிந்திரங்கல்  + காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்  யாமத்தும் யானே உளேன். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 87

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!! காதல் இன்பம்  ஊற்றுப்போன்றது  அது பெருகி பெருகி  கடலைபோல் மாறி  இன்பம் தரும் ....!!! என்னவனே ... பிரிந்து வாழ்வது  கடலை விட கொடுமை ... கடலின் ஆழத்தை அளந்து  விடலாம் - நீ தந்த துயரத்தை  அளவிடவே முடியாதடா ....!!! திருக்குறள் : 1166 + படர்மெலிந்திரங்கல்  + இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்  துன்பம் அதனிற் பெரிது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86

பகைவனாக மாறி விட்டால்...?

பகைவனாக மாறி விட்டால்...?  போதுமடா... நீ தரும் வலி .... இன்பமாக இருக்கும் .... போதே இத்தனை வலியை... தருபவனே ....!!! சில வேளை பகைவனாக மாறி விட்டால்  என்னென்ன  வலிகளையெல்லாம்  தருவாயோ உயிரே .....!!! திருக்குறள் : 1165 + படர்மெலிந்திரங்கல்  + துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு  நட்பினுள் ஆற்று பவர். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 85

ஏங்கி துடிக்குது மனம் ...!!!

ஏங்கி துடிக்குது மனம் ...!!! என் இதயம்  ஒரு காதல் கடல் ... வலியாலும் வெட்கத்தாலும்...  காதல் கடல் .... அலைமோதுகிறது ...!!! காதல் கடலில் நின்று  தத்தளிக்கிறேன் .. கரை ஒதுங்க ஏங்குகிறேன் ... ஓடமாக ஏதுமில்லாமல் .. ஏங்கி துடிக்குது மனம் ...!!! திருக்குறள் : 1164 + படர்மெலிந்திரங்கல்  + காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்  ஏமப் புணைமன்னும் இல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 84

உயிர் வலிக்கிறது

உயிர் வலிக்கிறது  இரு தலை  கொல்லி எறும்பு போல் ... ஒருபுறம் காதல் வலியை.. தாங்க முடியாமல்  உயிர் வலிக்கிறது  மறு புறம் சொல்ல முடியாமல்  நாணம் தடுக்கிறது ....!!! காதலால் ... என்னை காவடிபோல்  ஆக்கியவனே - உன் நினைவுகள்  நாணங்கள் காவடிபோல்  ஆடவைக்கிறது ....!!! திருக்குறள் : 1163 + படர்மெலிந்திரங்கல்  + காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்  நோனா உடம்பின் அகத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 83

என்னவன் தந்து விட்டான் ....!!!

என்னவன் தந்து விட்டான் ....!!! காதலின் துன்பத்தை  மறக்கவும் முடியாது  மறைக்கவும் முடியாது  மறைக்க முடியாத வலியை என்னவன் தந்து விட்டான் ....!!! என்னவனே  நீ தந்த காதல் வலியை  உன்னிடமும் சொல்ல  வெட்கம் தடுகிறது ... அத்தனை இன்பத்தை  தந்தவனே .....!!! திருக்குறள் : 1162 + படர்மெலிந்திரங்கல்  + கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு  உரைத்தலும் நாணுத் தரும். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 82

வலியை மறைக்கிறேன் ...!!!

வலியை மறைக்கிறேன் ...!!! காதலின் வலி  காலத்துக்கும் கொல்லும்... மரண வலி -யாரும் .. அறியாமல் இருக்க ... வலியை மறைக்கிறேன் ...!!! என் துன்பங்களை ... மறைக்க மறைக்க தான்  என் காதல் வலியும்... ஊற்று போல் ஊறிக்கொண்டே  இருக்கிறது ....!!! திருக்குறள் : 1161 + படர்மெலிந்திரங்கல்  + மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு  ஊற்றுநீர் போல மிகும். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 81

பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!

பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!! ஒப்புதலுக்கு துணைவனின்..  பிரிவை சம்மதிக்கும் ... பெண்கள் பலர் உள்ளனர் ..... பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!! எனக்கு தெரியவில்லை  என்னவனே உன்னை  பிரிந்த நொடியில் இருந்து  வாழ்வேனோ ...? நீ மீண்டும் வரும் வரை  இருப்பேனோ .....? திருக்குறள் : 1160 + பிரிவாற்றாமை + அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்  பின்இருந்து வாழ்வார் பலர். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 80

என்னவனின் பிரிவை விட ...!!!

என்னவனின் பிரிவை விட ...!!! தொட்டால் தான் சுடும் -தீ  அதுகூட பெரியதொரு ... துன்பத்தை தருவதில்லை ... என்னவனின் பிரிவை விட ...!!! காதலிலும் காமத்திலும் ... அன்புக்குரியவரின் பிரிவு ... தீயை விட கொடுமையான  வேதனை வடுவையும் ... தருகிறதே .....!!! திருக்குறள் : 1159 + பிரிவாற்றாமை + தொடிற்சுடின் அல்லது காமநோய் போல  விடிற்சுடல் ஆற்றுமோ தீ. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 79

நீ இல்லாத ஊரில் வாழ்வதா ..?

நீ இல்லாத ஊரில் வாழ்வதா ..?  உற்றார் இல்லாத ஊரிலும் .... உறவுகள் இல்லாத இடத்திலும் ... வாழ்வதை விட துன்பம் .... ஏதுண்டு என்னவனே .....? என் இனியவனே ... அதைவிட கொடுமை .... நீ இல்லாத இந்த ஊரில்  வாழ்வதா ..? வாழ்வின்  உயிர் பிரியும் கொடுமைக்கு  சமனல்லவா இக் கொடுமை ....!!! திருக்குறள் : 1158 + பிரிவாற்றாமை + இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்  இன்னாது இனியார்ப் பிரிவு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 78

மெல்லிடையானதை பார் ,....!!!

மெல்லிடையானதை பார் ,....!!! என்னவனே ....!!! நீ என்னை விட்டு பிரியும் .. துயரத்தை கொஞ்சம் பாராயோ ..? துன்பத்தால்  மெல்லிடையானதை பார் ,....!!! அணிந்திருக்கும் வளையல்  தானாக கழன்று விழுந்து  என் துயரத்தை ஊரறிய  செய்துவிட போகிறது .......!!! திருக்குறள் : 1157 + பிரிவாற்றாமை + துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை  இறைஇறவா நின்ற வளை. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 77