இடுகைகள்

நான் ஏற்கிறேன் நண்பா ...!!!

நான் ஏற்கிறேன் நண்பா ...!!! என்  அருமை நண்பா .... நீ எனக்காக உரிமையோடு ... செய்த காரியம் எனக்கு ... பிடித்ததோ இல்லையோ ... நான் ஏற்கிறேன் நண்பா ...!!! எனக்காக .... என் உரிமைக்காக நீ ... செய்த காரியத்தை நான் ... ஏற்காவிட்டால் நம் நட்பில் ... என்ன பயன் உண்டு ....? + குறள் 803 + பழைமை + பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை  செய்தாங்கு அமையாக் கடை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -23

நட்புக்கு சான்றடா நண்பா ....!!!

நட்புக்கு சான்றடா நண்பா ....!!! நண்பா..... நீ என்னை உரிமையுடன் .... திட்டுவதும் அரவணைப்பதும் ... நான் உன்னை உரிமையுடன் ... திட்டுவதும் அரவணைப்பதும் ... தாண்டா பழமை நட்பு ....!!! நீ  என்னை உரிமையோடு .... திட்டியதும் அன்பு கொண்டதையும்  எண்ணி எண்ணி மகிழ்வதே ... நட்புக்கு சான்றடா நண்பா ....!!! + குறள் 802 + பழைமை + நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு  உப்பாதல் சான்றோர் கடன். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -22

பழமை பேணும் நட்பு ....!!!

பழமை பேணும் நட்பு ....!!! என்  அருமை தோழா .... நாம் காலத்தால் அழியாத .... நண்பர்கள் -காலம் காலமாய் ... வாழும் நண்பர்கள் .....!!! நான்  விட்ட தவறை நீயும் .... நீ விட்ட தவறை நானும் .... கண்டுகொள்ளாமல் .... நட்போடு தொடர்கிறோம் இதுதாண்டா உயிர் நட்பு ... பழமை பேணும் நட்பு ....!!! + குறள் 801 + பழைமை + பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்  கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -21

காதல் அறிந்தோர் புரிவர் ....!!!

காதல் அறிந்தோர் புரிவர் ....!!! பெண்கள் ... காதலை கண்ணால்பேசி .... கண்ணால் வரவழைத்து ... காதல் நோயால் வாடுவர் ...!!! கண்ணால்  காதல் செய்வது பெண்மையின்  இன்னுமொரு பெண்மையாம் ... காதல் அறிந்தோர் புரிவர் ....!!! + குறள் 1280 + குறிப்பறிவுறுத்தல்  + பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்  காமநோய் சொல்லி இரவு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 200

நினைக்கதோன்றுது மனமே ....!!!

நினைக்கதோன்றுது மனமே ....!!! என்னவனே -நீ ... என்னை பிரிந்தால் ... வளையல்கள் கழரும் .... தோள்கள் மெலியும்.... இவையெல்லாம் எனை ... விட்டு பிரியும் ....!!! இவையெல்லாம் ... நடக்காமல் இருக்கணும் ... இல்லையேல் நானும் ... பிரிந்து விடுவேன் என ... நினைக்கதோன்றுது மனமே ....!!! + குறள் 1279 + குறிப்பறிவுறுத்தல்  + தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி  அஃதாண் டவள்செய் தது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 199

நேற்றுதானே பிரிந்தாய் ....!!!

நேற்றுதானே பிரிந்தாய் ....!!! என்னவனே ... நேற்றுதானே என்னை .... பிரிந்து சென்றாய் .....!!! என் உடல் ஏதோ.... ஒருவாரத்துக்கு முன் ... பிரிந்து சென்றதுபோல் ... தோல்கள் சுருங்கி ... தேமல் படர்கிறதே ....!!! + குறள் 1278 + குறிப்பறிவுறுத்தல்  + நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்  எழுநாளேம் மேனி பசந்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 198

என்னவன் பிரியபோகிறார் ....!!!

என்னவன் பிரியபோகிறார் ....!!! என்னவன் ... என்னோடு இன்பமாய் .... இருந்தாலும் -உடல்  இணைந்ததே தவிர .... உள்ளத்தால் பிரிந்தே ... இருந்தான் தோழி ....!!! என் கையில் இருந்த .... வளையல்கள் கழன்று ... விழுந்தபோதே அறிந்தேன் ... என்னவன் பிரியபோகிறார் .... என்னை காட்டிலும் என்  வளையல்கள் புத்திசாலிகள் ....!!! + குறள் 1277 + குறிப்பறிவுறுத்தல்  + தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்  முன்னம் உணர்ந்த வளை. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 197

அச்சத்தை உணர்த்துகிறது ....!!!

அச்சத்தை உணர்த்துகிறது ....!!! என் தோழியே .... என்னவனை பிரிந்து ... வாடிய துன்பம் கொடுமை... அத்தனையும் மறைந்தது .... என்னவன் என்னை கட்டி ... தழுவிய நொடி ....!!! என் மனது ஏதோ.... தவிக்கிறது மீண்டும் ... என்னவன் பிரிந்தால் ... என் நிலை எதுவாகுமோ .... அச்சத்தை உணர்த்துகிறது ....!!! + குறள் 1276 + குறிப்பறிவுறுத்தல்  + பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி  அன்பின்மை சூழ்வ துடைத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 196

விரும்பாத நட்பை விலக்கி வை ...!!!

விரும்பாத நட்பை விலக்கி வை ...!!! மனதிலே மாசில்லை ... செயலிலே குற்றமில்லை ..... அற்புதமான நட்பை ... எதை கொடுத்தேனும் .. பெற்றிட வேண்டும் ....!!! அன்போடு ஒத்துவராத .... உலகோடு சேர்ந்துவராத.... நட்பை எந்த விலை .... கொடுத்தேனும் விலகிட ... வேண்டும் ....!!! + குறள் 800 + நட்பாராய்தல் + மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்  ஒருவுக ஒப்பிலார் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -20

துன்பத்தில் உதறிய நண்பனே ....!!!

துன்பத்தில் உதறிய நண்பனே ....!!! துன்பத்தில் துடித்தபோது .... கை உதறிவிட்ட நண்பனே .... உன்னை நினைக்கும்போது ... கண்ணீர்கூட சுடுகிறது ....!!! உன்னை நினைக்கும் ... நொடியெல்லாம் நெஞ்சம் ... நெருப்பாய் கொதிக்கும் .... உயிர் பிரியும் பொழுதில் ... உன் நினைவு தணலாய் ... சுடுமட நண்பா ....!!! + குறள் 799 + நட்பாராய்தல் + கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை  உள்ளினும் உள்ளஞ் சுடும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -19

துன்பத்தில் உதவாத நட்பு வேண்டாம் ...!!!

துன்பத்தில் உதவாத நட்பு வேண்டாம் ...!!! ஊக்கம் என்பது .... வாழ்க்கையின் ஊட்டசத்து .... ஊக்கமற்ற செயல்கள் ... வாழ்கையே கெடுத்துவிடும் ....!!! துன்பத்தில்  உதவாத நட்பு .... இருந்தென்ன பயன் ....? அந்த நட்பு விலகுவதால் ... என்ன கவலை ....? + குறள் 798 + நட்பாராய்தல் + உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க  அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -18

அறிவற்ற நண்பனை விலக்கு....!!!

அறிவற்ற நண்பனை விலக்கு....!!! இறைவன் எனக்கு .... கொடுத்த வரம் .... அறிவற்ற நண்பர்களை .... என்னிடம் இருந்து .... பிரித்தமையே .....!!! அறிவற்ற நண்பனை .... இழப்பது ஒருவனின் ... வாழ்க்கை பாக்கியமே .... இறைவன் கொடுத்த ... பெரும் ஊதியம் ....!!! + குறள் 797 + நட்பாராய்தல் + ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்  கேண்மை ஒரீஇ விடல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -17

துன்பத்தில் இணைபவனே நண்பன்

படம்
துன்பத்தில் இணைபவனே நண்பன்  இன்பத்தில் இணைபவன் ... நண்பன் அல்லவே அல்ல ... துன்பத்தில் இணைபவனே... உற்ற நண்பன் .....!!! இறைவா எனக்கு .... துன்பத்தை கொடு .... உற்றநண்பன் யாரோ ... உள்ளபோது மட்டும் ... யார் என்பதை கண்டறிய .....!!! + குறள் 796 + நட்பாராய்தல் + கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை  நீட்டி அளப்பதோர் கோல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -16