இடுகைகள்

எனைவனை கண்டவுடன் ....

எனைவனை கண்டவுடன் .... என் மனசே .... எனைவனை கண்டவுடன் .... இன்பம் கொள்ள ஓடுகிறாய் .... என்னவனின் தவறுகளை .... புரிந்தால் நீ அவரை .... அணுகமாட்டாய்......!!! ஏதோ என் மனமே .... நீயும் அவரும் பட்டுதெளி .... என்னால் முடியாது மனசே .... உன்னை சமாதானபடுத்த....!!! + குறள் 1294 + நெஞ்சொடுபுலத்தல்  + இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே  துனிசெய்து துவ்வாய்காண் மற்று. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 214

என் அனுமதியில்லாமல் ...

என் அனுமதியில்லாமல் ... என் மனமே .... என் அனுமதியில்லாமல் ... எப்படி எனவனிடம் -நீ  அடிகடி சென்று வருகிறாய் ...? இந்த உலகில் ..... இரக்கமில்லாத மனசுக்கு .... இரக்கத்தை கற்பிக்க - நீ  சென்றாயோ ....? + குறள் 1293 + நெஞ்சொடுபுலத்தல்  + கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ  பெட்டாங்கு அவர்பின் செலல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 213

மனமே உனக்கு தெரிகிறது ...!!!

மனமே உனக்கு தெரிகிறது ...!!! ஓ மனமே .... உனக்கு தெரிகிறது ... என்னவன் நம்மை .... நினைக்காதபோதும் ... எம்மில் பகையில்லை ...!!! மனசே ..... நாம் என்னவனிடம் .... சென்றால் அவன் .... மன்னிப்பான் என்று .... தெரிந்ததாலோ எனக்கு ... முன் நினைக்கிறாயோ....? + குறள் 1292 + நெஞ்சொடுபுலத்தல்  + உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்  செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 212

பனிபோல் உருகுகிறாய் ,,,,?

பனிபோல் உருகுகிறாய் ,,,,? மனமே .... என்னை நினைக்காமல் .... இருக்கும் என்னவனின் .... மனம் கல்லாய் இருக்கும் ... போது மனமே நீமட்டும் .... ஏன் துடிக்கிறாய் ....? கல் நெஞ்சுடைய ..... என்னவனுக்காய் .... என் மனமே எதற்கு ....? பனிபோல் உருகுகிறாய் ,,,,? + குறள் 1291 + நெஞ்சொடுபுலத்தல்  + அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே  நீஎமக்கு ஆகா தது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 211

கண்ணால் பேசியவளே....

கண்ணால் பேசியவளே.... கண்ணால் பேசியவளே.... கண்ணும் கண்ணும் மோதி ... காமத்தை தோற்றுவித்தவளே... ஊடலை ஏன் மறந்தாய் ...? அடக்கிவைத்த உன் ... காதலை கொட்டி தீர்த்து .... இன்பம் கண்டுவிட்டால் .... ஊடலை மறந்து அதிகம் ... கூடல் கொண்டு விட்டால் ....!!! + குறள் 1290 + புணர்ச்சிவிதும்பல்  + கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்  என்னினும் தான்விதுப் புற்று. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 210

காதல் அழகு புரியும் ....!!!

காதல் பூவிலும் மென்மையானது அனுபவித்தவர்களுக்கே ... காதல் அழகு புரியும் ....!!! காதலை ... அதற்கேற்ற காலம் ... அதற்கேற்ற இடம் .... அதற்கேற்ற நேரம் ... கொண்டு அனுபவித்தால் ... அதன் அழகு புரியும் ... அனுபவித்தவர் உலகில் ... ஒரு சிலரே .....!!! + குறள் 1289 + புணர்ச்சிவிதும்பல் + மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 209

என் உள்ளம் நிறைந்தவனே

என் உள்ளம் நிறைந்தவனே என்  உள்ளம் நிறைந்தவனே .... மதுவின் போதைதரும் ... மார்பை கொண்டவனே ... மயக்குதடா என்னை உன் ... திரண்ட மார்பு ....!!! இத்தனை அழகும் ... எனக்கு மட்டும் தானே .... என் உயிர் மன்னவனே .... போதையின் மன்னவனே ....!!! + குறள் 1288 + புணர்ச்சிவிதும்பல்  + இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்  கள்ளற்றே கள்வநின் மார்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 208

மனம் ஏனோ உன்னையே ஏங்குதே ....!!!

மனம் ஏனோ உன்னையே ஏங்குதே ....!!! தெரிந்து கொண்டே .... குதிக்கிறோம் ஓடும் ... வெள்ளத்தில் .... நிச்சயம் வெள்ளம் ... நம்மை இழுத்துக்கொண்டே .... செல்லும் ஐயம் இல்லை ...!!! என்னவனே  நான் உன்னில் கோபத்தில் ... இருக்கிறேன் என்றறிந்தும் .... என் மனம் ஏனோ உன்னுடன் .... ஊடலுக்கே ஏங்குகிறதே .... அதில் ஏது பயன் ...? + குறள் 1287 + புணர்ச்சிவிதும்பல்  + உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்  பொய்த்தல் அறிந்தென் புலந்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 207

கடவுளை காணும்போது ...

கடவுளை காணும்போது ... கல்லை காணாதபோது ... கடவுளை காணோம் .... கடவுளை காணும்போது ... கல்லை காணோம்.... என்ற பாடல்போல் .....!!! கணவனை காணும் போது .... அவரில் தவறுகளை காணேன் ... கணவனை காணாத போது ... தவறுகளையே காண்கிறேன் ...  + குறள் 1286 + புணர்ச்சிவிதும்பல்  + காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்  காணேன் தவறல் லவை. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 206

நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!!

நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!! ஓடி ஓடி உதவி செய்தாலும் .... எதிர்பாராத உதவி செய்தாலும் .... யாருமே இதுவரை செய்யாத  உதவி செய்தாலும் வேண்டாம்  தீய நட்பு ....!!! பாதுகாப்பு இல்லாத நட்பு .... பயனற்ற நட்பாகும் ... எதற்கு இந்த நட்பு -நட்பே .... வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!! + குறள் 815 + தீ நட்பு, + செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை  எய்தலின் எய்தாமை நன்று. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -35

பேராபத்து நட்பால் வரும் ....

பேராபத்து நட்பால் வரும் .... பேராபத்து நட்பால் வரும் .... இவன் நட்பால் கெடுதல் ... வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...? தீய நட்பை ....!!! போர்க்களத்தில் கலை வாரும்  என்ற குதிரைமீது -யார் ,,,? போர் செய்வார்கள் ....? விலக்கிவிடு அந்த குதிரையை ...!!! + குறள் 814 + தீ நட்பு, + அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்  தமரின் தனிமை தலை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -34

பயனோடு பழகும் நட்பு ....

பயனோடு பழகும் நட்பு .... பயனோடு பழகும் நட்பு .... திருடர்களோடு பழகுவதும் .... ஒன்றே ....!!! பயனோடு பழகும் .... நட்பானது .... விலைமாதருக்கு சமனே ... பயனொடு பழகுவதை .... பயனற்றதாக்குனதே அறிவு ....!!! + குறள் 813 + தீ நட்பு, + உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது  கொள்வாரும் கள்வரும் நேர். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -33

விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!! பயன் இருந்தால் பழகும்  நட்பும் வேண்டாம் .... பயனில்லாவிட்டால் .... விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!! துன்பத்தில் சரிபாதியும் .... இன்பத்தில் சரிபாதியும் ..... இணையாத நட்பு .... இருதென்ன பயன் ....? + குறள் 812 + தீ நட்பு, + உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை  பெறினும் இழப்பினும் என். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -32

நடிப்பு நட்பு வேண்டாம் ...

நடிப்பு நட்பு வேண்டாம் ... உயிராய் உருகுவதுபோல்  உனக்கே வாழ்வதுபோல்  நடிப்பு நட்பு வேண்டாம் ... அது தீ நட்பு .....!!! உள்ளத்தில் இருந்து ... தோன்றாத நடப்பும்  உதட்டில் தோன்றும்  நட்பும் வேண்டாம் .... தீய வளர்வதை -நீ  வெட்டி விடுவதே ..... நன்றோ நன்று ....!!! + குறள் 811 + தீ நட்பு, + பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை  பெருகலிற் குன்றல் இனிது. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -31