இடுகைகள்

ஒப்புகொள்வதில்லை

ஒப்புகொள்வதில்லை ------------- ஒன்றுமே இல்லாதவன் .... ஒப்புகொள்வதில்லை .... எல்லாம் தெரிந்ததுபோல்  நடித்துக்கொள்வான் ,,,,!!! அறியாமையை .... ஏற்றுகொள்ளாதவன்..... பாதாள குழிக்குள் .... விழுந்துகொண்டிருக்கிறான் ....!!! + குறள் 849 + புல்லறிவாண்மை + காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்  கண்டானாம் தான்கண்ட வாறு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 69

தானாக திருந்து நண்பா

தானாக திருந்து நண்பா ----------- ஒன்றில்  தானாக திருந்து நண்பா .... நான் சொல்வதை கேட்டு .... திருந்து நண்பா .....!!! சொந்த புத்தியும் இல்லை .... சொல் புத்தியும் இல்லை .... இவர்களே உலகில் -எந்த  மருந்தாலும் மாற்ற முடியாத .... பெரும் நோயாளிகள் ....!!! + குறள் 848 + புல்லறிவாண்மை + ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்  போஒம் அளவுமோர் நோய். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 68

அறிவிலிகள் இவர்களே ....!!!

நல்லதையே செய் ... நல்லத்தையே கேள்.... நல்லதையே பார் ... என்ற தத்துவத்தை ..... கடைபிடிக்காதவர் .... அறிவிலிகள் இவர்களே ....!!! அறிவில்லாதவன் .... இதை செய்யாதவன் .... யானை தன் தலையில் ... மண் அள்ளி போட்டதுபோல் ....!!! + குறள் 847 + புல்லறிவாண்மை + அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 67

குற்றத்தை மறைக்க

செய்த .... குற்றத்தை ஒப்பு கொள்.... செய்த குற்றத்தை மேலும் .... செய்யாதே - அது மடமை ....!!! குற்றத்தை மறைக்க ... இன்னுமொரு குற்றத்தை ... செய்துகொண்டே இருப்பது .... உடலை அழகு படுத்த ... உடையை மாற்றும் மாயையாகும் ....!!! + குறள் 846 + புல்லறிவாண்மை + அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 66

ஒப்புகொள்வதே சிறப்பு

ஒப்புகொள்வதே சிறப்பு தெரியாததை தெரியாது .... ஒப்புகொள்வதே சிறப்பு ... தெரியாததை தெரிந்ததுபோல் .... வேஷம் போடுவதே -பெரும்  அறியாமை ....!!! அறியாத நூல்களை .... அறிந்ததை போல் பேசுவது .... அறிந்தவர்களுக்கே .... அறியாமையை ஏற்படுத்துவார் ...!!! + குறள் 845 + புல்லறிவாண்மை + கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற  வல்லதூஉம் ஐயம் தரும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 65

தனக்கே எல்லாம் புரியும்

தனக்கே எல்லாம் புரியும் அறியாமை ...? எது அறியாமை ...? கல்வியால் பெறதவறிய.... அறிவா ..? இல்லை ....!!! தனக்கே எல்லாம் புரியும் .... தான் சொல்வதே சரியாது .... தானே அறிவானவன் ... என்ற ஆணவமே அறியாமை ...!!! + குறள் 844 + புல்லறிவாண்மை + வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை  உடையம்யாம் என்னும் செருக்கு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 64

தன்னை வருத்தும்போது

தன்னை வருத்தும்போது  அறிவில்லாதவன் ..... யார் அறிவில்லாதவன் ...? வெறுமனையே புத்தக .... அறிவை பெறாதவன் அல்ல ...!!! தன்னை வருத்தும்போது ... எதிரி கூட வெறுக்கும் படி .... தன்னை வருத்துகிறானே.... அவன்தான் அறிவற்றவன் ...!!! + குறள் 843 + புல்லறிவாண்மை + அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை  செறுவார்க்கும் செய்தல் அரிது. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 63

அறிவற்றவன் அல்ல ...!!!

அறிவற்றவன் அல்ல ...!!! ---- அறிவற்றவன் .... அறிவில் தான் அற்றவன் .... கொடுப்பதில் அறிவற்றவன் .... நிகரற்ற கொடையாளி .... கொடுக்கும் போது அவன் ... அறிவற்றவன் அல்ல ...!!! அறிவற்றவன் .... கொடுக்கும் பொருள் ..... அறிவானவனை கவர்கிறது .... அவன் பெற்ற பாக்கியமே ...!!! + குறள் 842 + புல்லறிவாண்மை + அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 62

பெரும் பஞ்சம்

பெரும் பஞ்சம்  செல்வம் இல்லை .... சொத்துகள் இல்லை .... திரவியங்கள் இல்லை ... இவை கவலையில்லை .....!!! சேர்க்க வேண்டிய செல்வம் .... அறிவே அறிவை திரட்டாத .... மனிதனையே பெரியோர் .... பெரும் பஞ்சம் என்பர் ,,,,!!! + குறள் 841 + புல்லறிவாண்மை + அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை  இன்மையா வையா துலகு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 61

செந்தாமரை மத்தியில் ....

செந்தாமரை மத்தியில் .... அறிஞர்கள் கூடிய .... மகாசபையில் .... அறிவற்றவன் ஒருவன் .... அமர்ந்திருந்தால் ..... செந்தாமரை மத்தியில் .... நாற்றம் எடுக்கும் பிணம் ... போன்றது ....!!! மஞ்சு மெத்தையில் .... கழுவாத காலுடன் .... மிதிப்பதுபோல் .... பேதை ஒருவன் .... அறிஞர்கள் மத்தியில் .... இருப்பதாகும் .....!!! + குறள் 840 + பேதைமை + கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்  குழாஅத்துப் பேதை புகல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 60

நட்பின் பிரிவு துன்பம் இல்லை

நட்பின் பிரிவு துன்பம் இல்லை  நட்பின் பிரிவு ஒன்றும் ..... துன்பம் இல்லை .... அறிவற்றவருடன் நட்பு ..... கொண்டால் பிரிவு .... துன்பமில்லையே....!!! அறிவற்ற பேதையுடன் .... பழகிய நட்பு இனிமை ... அதை பிரிந்து செல்வதும் .... இனிமையே ....!!! + குறள் 839 + பேதைமை + பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்  பீழை தருவதொன் றில் + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 59

ஒன்றுமே அறியாதவன் ...!!!

ஒன்றுமே அறியாதவன் ...!!! பேதை என்பவன் ...? எது நல்லது எது கெட்டது... ஒன்றுமே அறியாதவன் ...!!! பேதையிடம் .... கிடைக்கும் செல்வம் ... பித்து பிடித்தவனிடம் .... கிடைத்த போதைப்பொருள் ... போன்றது ......!!! + குறள் 838 + பேதைமை + மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்  கையொன்று உடைமை பெறின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 58

சொத்தை சேர்க்காதே

சொத்தை சேர்க்காதே அறிவுடன் செல்லவத்தை..... சேர்ப்பதே சிறந்த அறிவு .... அறிவில்லாமல் பேதையுடன் .... சொத்தை சேர்க்காதே .... நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!! அறிவில்லாமல் சொத்தை .... நீ சேர்ப்பாய்யாயின்.... கைக்கு எட்டியது வாய்க்கு .... எட்டாததுபோல் ..... உன் உறவுகள் பசியுடன் ... வாடி வதங்குவர் -உன் ... செல்வம் வேடிக்கை .... பார்த்து சிரிக்கும் ....!!! + குறள் 837 + பேதைமை + ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை  பெருஞ்செல்வம் உற்றக் கடை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 57

என் வழி தனிவழி

என் வழி தனிவழி  என் வழி தனிவழி .... வார்த்தையால் பேசி பேசி .... வாழ்கையை இழப்பவர்கள் .... தன் வழி எதுவென அறியாதவர் ....!!! தன் வழியை அறியாதவனும் .... தன்னால் செய்ய முடியாதவற்றை .... வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் .... தானும் கேட்டு தன் செயலையும்..... கெடுப்பான் ....!!! + குறள் 836 + பேதைமை + பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்  பேதை வினைமேற் கொளின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 56

எல்லாம் எனக்கு தெரியும் ....

எல்லாம் எனக்கு தெரியும் .... ---- தான் சொல்வதே சரி .... தான் செய்வதே சரி .... யாரும் தடுக்க முடியாது ..... எல்லாம் எனக்கு தெரியும் .... இதுவே அறிவின்மையின் .... உச்சமாகும் ....!!! அறிவின்மையில் வாழ்பவன் .... நரகலோகத்துக்கு......  போகத்தேவையில்லை ...... வாழும் காலத்திலேயே .... நகரத்திலேயே வாழ்கிறான் ...!!! + குறள் 835 + பேதைமை + ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்  தான்புக் கழுந்தும் அளறு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 55