இடுகைகள்

திருக்குறள் வசனக்கவிதை

சொல் நீ யார் ...? உயிரை எடுக்கும் யமனா ...? மாய மானா ...? உடலில் படரும் தாமரை ... கொடியா ...? எல்லாம் கலந்த கலவையா ...? + குறள் - 1085 + கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. + திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை

பேரழகி நீ உன் பார்வையோ ... உயிரையே வதைக்கும் ....! உன் அறிவையும் அழகையும் தாண்டி ... வதைக்கிறது என்னை ...!!! + குறள் - 1084 + கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். + திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை 03

என்னை கொல்வதற்கு யமனும் வரத்தேவையில்லை ... பாசக்கயிறும் தேவையில்லை .... உன் பார்வையே போதும் ... இறந்து விடுவேன் ....!!! +++ குறள் - 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. +++ திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை 02

நான் நோக்கிய போது .. நீயும் நோக்கினாய் .... செத்தேனடி நான் ....! உன் கண் ... அணுமின் கதிர் ..... ஒரு நாட்டின் சேனை ... இரண்டாலும் கொன்று ... விட்டாயே என்னை ....!!! +++ குறள் - 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. +++ திருக்குறள் வசனக்கவிதை

திருக்குறள் வசனக்கவிதை -01

என் கண்ணில் பட்டவளே.....!!! நீ பிரம்மனின் .... தங்க தேவதையா ....? தெய்வீக தேவதையா ...? தோகை மயில் அழகியா ...? மானிட பெண் தாரகையா ...? என்னை கொல்லும் யார் நீ ...? +++ குறள் - 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. +++ திருக்குறள் வசனக்கவிதை 

ஒப்புகொள்வதில்லை

ஒப்புகொள்வதில்லை ------------- ஒன்றுமே இல்லாதவன் .... ஒப்புகொள்வதில்லை .... எல்லாம் தெரிந்ததுபோல்  நடித்துக்கொள்வான் ,,,,!!! அறியாமையை .... ஏற்றுகொள்ளாதவன்..... பாதாள குழிக்குள் .... விழுந்துகொண்டிருக்கிறான் ....!!! + குறள் 849 + புல்லறிவாண்மை + காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்  கண்டானாம் தான்கண்ட வாறு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 69

தானாக திருந்து நண்பா

தானாக திருந்து நண்பா ----------- ஒன்றில்  தானாக திருந்து நண்பா .... நான் சொல்வதை கேட்டு .... திருந்து நண்பா .....!!! சொந்த புத்தியும் இல்லை .... சொல் புத்தியும் இல்லை .... இவர்களே உலகில் -எந்த  மருந்தாலும் மாற்ற முடியாத .... பெரும் நோயாளிகள் ....!!! + குறள் 848 + புல்லறிவாண்மை + ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்  போஒம் அளவுமோர் நோய். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 68

அறிவிலிகள் இவர்களே ....!!!

நல்லதையே செய் ... நல்லத்தையே கேள்.... நல்லதையே பார் ... என்ற தத்துவத்தை ..... கடைபிடிக்காதவர் .... அறிவிலிகள் இவர்களே ....!!! அறிவில்லாதவன் .... இதை செய்யாதவன் .... யானை தன் தலையில் ... மண் அள்ளி போட்டதுபோல் ....!!! + குறள் 847 + புல்லறிவாண்மை + அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 67

குற்றத்தை மறைக்க

செய்த .... குற்றத்தை ஒப்பு கொள்.... செய்த குற்றத்தை மேலும் .... செய்யாதே - அது மடமை ....!!! குற்றத்தை மறைக்க ... இன்னுமொரு குற்றத்தை ... செய்துகொண்டே இருப்பது .... உடலை அழகு படுத்த ... உடையை மாற்றும் மாயையாகும் ....!!! + குறள் 846 + புல்லறிவாண்மை + அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 66

ஒப்புகொள்வதே சிறப்பு

ஒப்புகொள்வதே சிறப்பு தெரியாததை தெரியாது .... ஒப்புகொள்வதே சிறப்பு ... தெரியாததை தெரிந்ததுபோல் .... வேஷம் போடுவதே -பெரும்  அறியாமை ....!!! அறியாத நூல்களை .... அறிந்ததை போல் பேசுவது .... அறிந்தவர்களுக்கே .... அறியாமையை ஏற்படுத்துவார் ...!!! + குறள் 845 + புல்லறிவாண்மை + கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற  வல்லதூஉம் ஐயம் தரும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 65

தனக்கே எல்லாம் புரியும்

தனக்கே எல்லாம் புரியும் அறியாமை ...? எது அறியாமை ...? கல்வியால் பெறதவறிய.... அறிவா ..? இல்லை ....!!! தனக்கே எல்லாம் புரியும் .... தான் சொல்வதே சரியாது .... தானே அறிவானவன் ... என்ற ஆணவமே அறியாமை ...!!! + குறள் 844 + புல்லறிவாண்மை + வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை  உடையம்யாம் என்னும் செருக்கு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 64

தன்னை வருத்தும்போது

தன்னை வருத்தும்போது  அறிவில்லாதவன் ..... யார் அறிவில்லாதவன் ...? வெறுமனையே புத்தக .... அறிவை பெறாதவன் அல்ல ...!!! தன்னை வருத்தும்போது ... எதிரி கூட வெறுக்கும் படி .... தன்னை வருத்துகிறானே.... அவன்தான் அறிவற்றவன் ...!!! + குறள் 843 + புல்லறிவாண்மை + அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை  செறுவார்க்கும் செய்தல் அரிது. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 63

அறிவற்றவன் அல்ல ...!!!

அறிவற்றவன் அல்ல ...!!! ---- அறிவற்றவன் .... அறிவில் தான் அற்றவன் .... கொடுப்பதில் அறிவற்றவன் .... நிகரற்ற கொடையாளி .... கொடுக்கும் போது அவன் ... அறிவற்றவன் அல்ல ...!!! அறிவற்றவன் .... கொடுக்கும் பொருள் ..... அறிவானவனை கவர்கிறது .... அவன் பெற்ற பாக்கியமே ...!!! + குறள் 842 + புல்லறிவாண்மை + அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 62

பெரும் பஞ்சம்

பெரும் பஞ்சம்  செல்வம் இல்லை .... சொத்துகள் இல்லை .... திரவியங்கள் இல்லை ... இவை கவலையில்லை .....!!! சேர்க்க வேண்டிய செல்வம் .... அறிவே அறிவை திரட்டாத .... மனிதனையே பெரியோர் .... பெரும் பஞ்சம் என்பர் ,,,,!!! + குறள் 841 + புல்லறிவாண்மை + அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை  இன்மையா வையா துலகு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 61

செந்தாமரை மத்தியில் ....

செந்தாமரை மத்தியில் .... அறிஞர்கள் கூடிய .... மகாசபையில் .... அறிவற்றவன் ஒருவன் .... அமர்ந்திருந்தால் ..... செந்தாமரை மத்தியில் .... நாற்றம் எடுக்கும் பிணம் ... போன்றது ....!!! மஞ்சு மெத்தையில் .... கழுவாத காலுடன் .... மிதிப்பதுபோல் .... பேதை ஒருவன் .... அறிஞர்கள் மத்தியில் .... இருப்பதாகும் .....!!! + குறள் 840 + பேதைமை + கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்  குழாஅத்துப் பேதை புகல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 60