இடுகைகள்

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(51-55)

மன்னித்துவிடாதே ....!!! நண்பா .... அறியாமையை அறிந்து கொள் .... அறியாமல் தவறு செய்தால் .... மன்னிக்கலாம் ..... அறிந்தே தவறுசெய்தால் .... மன்னித்துவிடாதே ....!!! தீமை என்று தெரிந்தும் ,,,, நட்பு என்று சொல்லிகொண்டு ..... வரபோகும் நன்மையை .... அறியாமல் விடுவதே .... அறியாமையாகும் .....!!! + குறள் 831 + பேதைமை + பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு  ஊதியம் போக விடல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 51 அறியாமையில் பெரும் .... அறியாமை அறிந்துகொள் .... நண்பா .....!!! அனுகூலம் இல்லையென்று .... அறிவுக்கு எட்டியபோதும் .... தொடர்ந்து அதன்மேல் பற்று .... வைத்துகொண்டு தொடர்வதாகும் .... அனுகூலம் இல்லாதவற்றை .... அறுத்துவிட வேண்டும் ....!!! + குறள் 832 + பேதைமை + பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை  கையல்ல தன்கட் செயல். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 52 -- தீமை ஏற்பட்டால் தலை  குனிந்து வெட்கப்படு ..... ரசிக்க வேண்டியவற்றை .... ரசித்து வாழ்,,,,,, அன்பு வைக்கவேண்டின் ... அன்புவை .....!!! செய்ய  வேண்டிய அனைத்தையும் ..... செய்யாதிருப்பது அறியாமையி...

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(46-50)

நல்லவர்போல் நடித்தாலும் .... காக்கை  அன்னநடை நடந்தாலும் .... காக்கை காக்கைதான் ... அதுபோல் கெட்டவர்கள்.... நல்லவர்போல் நடித்தாலும் .... கெட்டவரே......!!! அறிந்தேன் .... நீ பேசிய வார்த்தையில் .... எவ்வளவோ நல்லவன் போல் ..... நடித்தாலும் உன் முகமூடி .... கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!! + குறள் 826 + கூடாநட்பு + நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்  ஒல்லை உணரப் படும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 46 ------------- வேஷங்கள் அடுத்தநொடி அழிந்துவிடும் .....!!! வேஷம்  போட்டு ராஜாவானாலும் ... ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் .... வேஷங்கள் அடுத்தநொடி ....... அழிந்துவிடும் .....!!! வில்  வளைவது அம்பை .... எய்வதற்கே -அழகாயினும்... வில் ஆபத்தானதே ..... கெட்டவர்கள் நல்லவார்த்தை .... பேசினாலும் கேட்டவரே ....!!! + குறள் 827 + கூடாநட்பு + சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்  தீங்கு குறித்தமை யான். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 47 ----------- பகைவரின் நட்பு கொலைகருவி பகைவன் .... கையெடுத்து கும்பிட்டாலும் .... கைக்குள் துப்பாக்...

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(41-45)

மனதால் நேசிக்காத நட்பு மனதால் நேசிக்காத நட்பு .... நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு .... காரியத்துக்காய் பழகும் நட்பு .... ஆருயிர் போல் பழகினாலும் .... அது கூடா நட்பே ....!!! உள் ஒன்று வைத்து .... புறமொன்று பழகும் நட்பை .... வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ... வெட்டி எரிவதே சிறப்பு ....!!! + குறள் 821 + கூடாநட்பு + சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 41 --------- மனமில்லாமல் பழகும் நட்பு .... --- வேண்டும் ஆனால் வேண்டாம் ... அன்பு இருக்கும் , இருக்காது சந்தேகத்துடன் பழகும் நட்பு ..... சங்கடத்தில் முடியும் .....!!! மனமில்லாமல் பழகும் நட்பு .... மனமில்லாமல் பழகும் .... பாலியல் இன்பத்துக்கு நிகர் .... இரண்டுமே வேண்டாம் மனமே ....!!! + குறள் 822 + கூடாநட்பு + இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 42 ------------ நல் நட்பாக மாறிவிடாது ....!!! --- மனதால் பொருந்தாத நட்பு .... அமிர்தம்போல் பழகினாலும் .... உடைந்த மட்பாண்டாமே.....!!! மனதுக்கு பொருந்தாத நட்பு .......

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 36-40)

உயிருக்கு உயிராய் பழகினாலும் ... அறிவற்றவனின் நட்பு ..... உயிருக்கு உயிராய் பழகினாலும் ... உயிரைதருவேன் என கூறினாலும் .... தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!! அறிவற்றவனின்  நட்பை காட்டிலும் ..... அறிவுள்ளவனின் பகை ..... பலமடங்கு உத்தமம் .......!!! + குறள் 816 + தீ நட்பு, + பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்  ஏதின்மை கோடி உறும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -36 சிரித்து சிரித்து பழகும் .... கெட்ட நட்பை காட்டிலும் .... வெறுத்து வெறுத்து பேசும் .... பகை கொண்ட நட்பு மேல் ....!!! கெட்ட நட்பால் .... சில நன்மைகள் கிடைப்பதை .... காட்டிலும் - பகை நட்பால் .... ஆயிரம் தீமைகள் வருவது .... எவ்வளவோ மேல் .....!!! + குறள் 817 + தீ நட்பு, + நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்  பத்தடுத்த கோடி உறும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -37 நடிப்போடு பழகும் நட்பைவிடு  செய்ய கூடிய உதவியை .... செய்ய முடியாததுபோல் .... பாசாங்கு காட்டும் நட்பை .... தொடராதே....!!! நடிப்போடு பழகும் நட்பை .... மெல்ல மெல்ல விலக்குவதே .... அறிவுடைய ஒருவனின் ...... அற்ப...

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 31-35)

நடிப்பு நட்பு வேண்டாம் ... உயிராய் உருகுவதுபோல்  உனக்கே வாழ்வதுபோல்  நடிப்பு நட்பு வேண்டாம் ... அது தீ நட்பு .....!!! நடிப்பு நட்பு வேண்டாம் ... உள்ளத்தில் இருந்து ... தோன்றாத நடப்பும்  உதட்டில் தோன்றும்  நட்பும் வேண்டாம் .... தீய வளர்வதை -நீ  வெட்டி விடுவதே ..... நன்றோ நன்று ....!!! + குறள் 811 + தீ நட்பு, + பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை  பெருகலிற் குன்றல் இனிது. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -31 ------------ விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!! பயன் இருந்தால் பழகும்  நட்பும் வேண்டாம் .... பயனில்லாவிட்டால் .... விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!! துன்பத்தில் சரிபாதியும் .... இன்பத்தில் சரிபாதியும் ..... இணையாத நட்பு .... இருதென்ன பயன் ....? + குறள் 812 + தீ நட்பு, + உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை  பெறினும் இழப்பினும் என். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -32 ---------- பயனோடு பழகும் நட்பு .... பயனோடு பழகும் நட்பு .... திருடர்களோடு பழகுவதும் .... ஒன்றே ....!!! பயனோடு பழகும் .... ந...