திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ‍‍‍ ‍பாகம் 35

காதல் வேட்கை ...

காதல் வேட்கை ...
கோடரி போன்றது ...
காதல் வரும் வரை நாணம் ...
வந்தபின் நாணத்தை காணாமல் ...
வெட்டி எறிந்துவிடும் ....!!!

எத்தனைதான் ...
நாணத்தால் காதலை ...
மூடி வைத்தாலும் -ஒரு 
நொடியில் காதல் மரத்தை ..
வெட்டும் கோடரிபோல்...
உடைத்து எறிந்துவிடும் ....!!!
+
குறள் 1251
+
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 171

@@@

இரக்கமே அற்றது காதல் ...

காதல் வேட்கை ...
இரக்கமே அற்றது ....
என்னை நினைக்காமல் ...
உன்னை நினைக்க வைக்கிறது ....!!!

நிம்மதியாய் ...
தூங்கும் நள்ளிரவில் கூட ..
உன் நினைவால் வதைத்து ..
கொல்கிறது...
+
குறள் 1252
+
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை 
யாமத்தும் ஆளும் தொழில்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 172

@@@

காதல் செய்யாமல் இருக்க ....!!!

அடக்க முடியாது ....
நமக்கு வரும் தும்மலை ....
இருக்கும் இடத்தையும் ..
பார்க்காமல் தும்மிவிடுகிறோம்....!!!

காதலும் அவ்வாறே ....
இயன்றவரை மறைத்து ...
பார்கிறேன் முடியவில்லை ..
உயிரே இதற்கு மேல் ...
காதல் செய்யாமல் இருக்க ....!!!
+
குறள் 1253
+
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் 
தும்மல்போல் தோன்றி விடும்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 173

@@@

ஊர் முழுக்க பரகசியமானதே ...!!!

என்னைவிட மன உறுதி ...
யாருக்கு வரும் என்று ...
கர்வத்தில் இதுவரை ...
வாழ்ந்தேன் .....!!!

எல்லாமே 
பொய்யாய் போனது உயிரே ...
உன்னை கண்ட நொடியில் ...
தோன்றிய காதலால் ...
ஊர் முழுக்க பரகசியமானதே ...!!!
+
குறள் 1254
+
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் 
மறையிறந்து மன்று படும்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 174

@@@

என்னை பிரிந்து சென்றவனே ....

என்னை பிரிந்து சென்றவனே ....
நீர் பிரிந்து செல்லும் போது ....
காதல் வேட்கையை கொண்டு ...
செல்லாது விட்டால் காதல் வலி ..
உமக்கு புரியும் ....!!!

காதல் வேட்கையோடு ...
நீரும் சென்றால் என் வலி ..
உமக்கு புரியபோவதே..
இல்லை என்பது உண்மை ...!!!
+
குறள் 1255
+
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் 
உற்றார் அறிவதொன்று அன்று.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 175

கருத்துகள்