திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 39 )

எனக்கு புரியுமடி ....!!!

என்னவளே ...
உன் விருப்பத்தை ....
சொல்லாமல் இருந்தாலும் ....
சொல்ல மறுத்தாலும் ...
எனக்கு புரியுமடி ....!!!

உன்னையும் தாண்டி ....
கருவிழி கண்கள் ....
மனதினுள் இருப்பதை ....
சொல்லிக்கொண்டே ....
இருக்குதடி .....!!!
+
குறள் 1271
+
குறிப்பறிவுறுத்தல் 
+
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 191

@@@@@

கருவிழி அழகியே ...

கண் அழகியே ....
கருவிழி அழகியே ...
சந்தன கலரில் ...
மூங்கில்போல் ....
தோள் அழகியே .....!!!

அத்தனை அழகையும் ....
அற்புதமாய் கொண்டவளே ....
உன் பெண்மை நிறைந்த ...
அழகோ அழகு ....!!!
+
குறள் 1272
+
குறிப்பறிவுறுத்தல் 
+
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 192

@@@@@

அழகை நான் உணர்வேன் ....!!!

முத்துமணியால்....
மறைந்திருக்கும் நூல்போல் ....
என்னவளே உன் அழகு ....
மறைதிருக்குதடி ....!!!

என்னதான் ....
அழகை நீ மறைத்தாலும் ....
உன்னில் மறைந்திருக்கும் ...
அழகை நான் உணர்வேன் ....!!!
+
குறள் 1273
+
குறிப்பறிவுறுத்தல் 
+
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 193

@@@@@@

நீ ஒருநொடி புன்னகை ...

மொட்டுக்குள் ....
மறைந்திருக்கும் ...
நறு மணம் போல் ....
என்னவளுக்குள்....
மறைந்திருக்கும் ...
அழகோ அழகு .....!!!

புன்னகை அரசியே ....
நீ ஒருநொடி புன்னகை ...
புரிந்தால் போதுமடி ....
என் நினைவோடு நீ ....
வாழும் அழகை ரசிக்க ....!!!

+
குறள் 1274
+
குறிப்பறிவுறுத்தல் 
+
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 194

@@@@@

என் துயர் தீர்க்கும் ...

கை நிறைய வளையலும் ....
கழுத்து நிறைய மாலையும் ....
வண்ண மிகு அணிகலன்களும் ....
என்னவனை 
வண்ணமயமாக்குகிறது .....!!!

இத்தனை அழகையும் ...
கொண்டவளே உன் ...
கள்ளத்தனமான குறும்பு ....
பார்வை என் துயர் தீர்க்கும் ...
மருந்தல்லவோ ....!!!
+
குறள் 1275
+
குறிப்பறிவுறுத்தல் 
+
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 195

கருத்துகள்